SELANGOR

கம்போங் பாரு ஹைக்கோமில் நடைபெற்ற மலிவு விற்பனையில் 300 பேர் பங்கேற்பு

ஷா ஆலம், பிப் 28- இங்குள்ள கம்போங் பாரு ஹைக்கோமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிலாங்கூர் அரசின் ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனையில் 300க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெற்ற இந்த மலிவு விற்பனையில் மூவினங்களையும் சேர்ந்த பொது மக்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் சென்றதாகக் கோத்தா கெமுனிங் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சமூக நலத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான வீ.கணபதிராவ் கூறினார்.

இந்த மலிவு விற்பனைக்கு வருகை புரிந்த கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் விற்பனையில் கலந்து கொண்டவர்களுடன் உரையாடினார்.

இந்த அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனைக்குச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் மற்றும் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழக (பி.கே.பி.எஸ்.) அதிகாரிகளைத் தாம் பெரிதும் பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனையை மாநில அரசு கடந்த ஜனவரி மாதம் 15ஆம் தேதி தொடங்கி மே மாதம் வரை மாநிலத்திலுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய 1,200 இடங்களில் நடத்துகிறது.

இந்த விற்பனையில் முழு கோழி 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும், 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.


Pengarang :