ALAM SEKITAR & CUACANATIONAL

சரவாவில் வெள்ளப் பாதிப்பு அதிகரிப்பு- 278 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம்

கூச்சிங், மார்ச் 1- சரவா மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி கூச்சிங், பாவ், சிபுரான் மாவட்டங்களில் 65 குடும்பங்களைச் சேர்ந்த 278 பேர் துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

நேற்றிரவு 31 குடும்பங்களைச் சேர்ந்த 127 பேர் மட்டுமே துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்த நிலையில் இன்று அந்த எண்ணிக்கை அதிகரித்து புதிதாக ஆறு துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டதாக மாநிலப் பேரிடர் மேலாண்மை செயலகம் கூறியது.

கூச்சிங், கம்போங் பத்து கித்தாங் ஜெயா, நுர் ஹிடாயா பள்ளிவாசலில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 126 பேர் தங்க வைக்கப்பட்டுள்ள வேளையில் பத்து காவா, சுங் ஹூவா சீனப்பள்ளியில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 76 பேரும் பத்து கித்தாங் ஜெயா சமூக மண்டபத்தில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அது தெரிவித்தது.

பாவ் மாவட்டத்தின் டத்தோஸ்ரீ ஹம்டான் மண்டபத்தில் 20 குடும்பங்களும் கம்போங் ஓபார் பாலாய் ராயாவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேரும் அடைக்கலம் நாடிடியுள்ளனர். சிபுரானில் உள்ள கம்போங் முண்டாய் சமூக மண்டபத்தில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய சில தினங்களாகப் பெய்து வரும் அடைமழையின் காரணமாக இந்த மூன்று மாவட்டங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.


Pengarang :