ALAM SEKITAR & CUACANATIONAL

வெள்ளம் காரணமாகச் சபாவில் 464 பேர் நிவாரண மையங்களுக்கு இடமாற்றம்

கோத்தா கினபாலு, மார்ச் 1- சபா மாநிலத்தின் கோத்தா மருடு மற்றும் தோங்கோட் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இன்று காலை 166 குடும்பங்களைச் சேர்ந்த 464 பேர் வெள்ள நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.

கோத்தா மருடு சமூக மண்டபத்தில் 149 குடும்பங்களைச் சேர்ந்த 377 பேர் தங்க வைக்கப்பட்டுள்ள வேளையில் தோங்கோட் கம்போங் சிம்பாங் என்திபிலோன் மினி மண்டபத்தில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 87 பேர் அடைக்கலம் புகுந்துள்ளதாகச் சபா மாநிலப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்தது.

அவ்விரு நிவாரண மையங்களும் நேற்று திறக்கப்பட்டதாகக் கூறிய அச்செயலகம், நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை எனக் கூறியது.

நேற்று தொடர்ச்சியாகப் பெய்த மழை காரணமாக இப்பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டன. இன்று காலை அம்மாநிலத்தில் வானிலை தெளிவாகக் காணப்பட்டது.


Pengarang :