SELANGOR

தொகுதி சேவை மையம், எம்.பி.பி.ஜே. ஒத்துழைப்புடன் கம்போங் துங்கு பொழுதுபோக்கு பூங்கா தரம் உயர்த்தப்பட்டது

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 1- கம்போங் துங்கு சட்டமன்றத் தொகுதி மற்றும் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் ஒத்துழைப்புடன் இங்குள்ள எஸ்.எஸ். 2/32 பொழுதுபோக்கு பூங்கா தரம் உயர்த்தப்பட்டது.

அந்த பொழுதுபோக்கு பூங்காவில் வர்ணம் பூசுவதற்கும் அங்குள்ள கைப்பந்து மைதானத்தைச் சுற்றி வேலி அமைப்பதற்கும் 48,105 வெள்ளி செலவிடப்பட்டதாகத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லிம் யீ வேய் கூறினார்.

மேலும் அந்த பூங்காவிலுள்ள வலைப்பந்து மைதானம் மற்றும் நடைபாதை போடுவது, நாற்காலிகளை பழுதுபார்ப்பது, விளையாட்டு சாதனங்களுக்கு வர்ணம் பூசுவது போன்றப் பணிகளை மாநகர் மன்றம் மேற்கொண்டது என்று அவர் சொன்னார்.

விளையாட்டு மைதானத்தின் தரையில் விரிசல் ஏற்பட்டு விளையாட்டாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது மற்றும் இதர விளையாட்டு வசதிகள் பழுதடைந்த நிலையில் காணப்படுவது தொடர்பில் பொது மக்களிடமிருந்து கிடைத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

இங்குள்ள எஸ்.எஸ்.2 பகுதியில் கடந்தாண்டு தொடங்கி இதுவரை ஆறு அடிப்படை வசதித் திட்டங்களைத் தமது தரப்பு பெட்டாலிங் மாநகர் மன்றம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா உதவியுடன் சீரமைப்பு செய்ததாக அவர் மேலும் கூறினார்.


Pengarang :