NATIONAL

நாடு பொருளாதார மந்த நிலையை எதிர்நோக்காது- இவ்வாண்டு 4.5 விழுக்காடு வளர்ச்சிப் பதிவாகும்

ஷா ஆலம், மார்ச் 6:-உலகளாவிய நிச்சயமற்ற சவால்களுக்கு மத்தியிலும் 
மலேசியாவின் பொருளாதாரம் இந்த ஆண்டு 4.5 சதவிகிதம் வளர்ச்சியடையும் என்று 
கணிக்கப்பட்டுள்ளது என்று துணை நிதி அமைச்சர் கூறினார்.

கடந்த ஆண்டு பதிவுசெய்யப்பட்ட பொருளாதார வளர்ச்சி, அனைத்துலக நிதியம் (ஐ.எம்.எஃப்.) மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் கணிப்புடன் இது ஒத்துப்போகிறது என்று டத்தோஸ்ரீ அகமது மஸ்லான் சொன்னார்  .

இந்த ஆண்டும் நாடு பொருளாதார மந்த நிலையை சந்திக்காது என்பதோடு 
மலேசியாவைக் கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாக மாற்றுவதில் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு மலேசியா 4.4 சதவிகிதம் மற்றும் 4 சதவிகிதம் பொருளாதார 
வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்று ஐ.எம்.எஃப். மற்றும் உலக வங்கி கணித்துள்ளது 
என்று அவர் இன்று மக்களவை அமர்வில் விளக்கினார்.

நுட்ப ரீதியிலான பொருளாதார மந்த நிலை என்பது ஒரு நாடு பொருளாதாரச் மத்த நிலையை அதாவது தொடர்ந்து இரண்டு முறை எதிர்மறையான காலாண்டு 
வளர்ச்சியைப் பதிவு செய்யும் போது ஏற்படுவதாகும் என அவர் சொன்னார்.

இந்த ஆண்டு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படும் பொருளாதார மந்த நிலையை எதிர் கொள்ள அரசாங்கம் கொண்டுள்ள  திட்டம் குறித்து  பாகான் செராய் உறுப்பினர் 
டத்தோ இட்ரிஸ் அகமதுவின் கேள்விக்கு அவர் இவ்வாறு  பதிலளித்தார்.

Pengarang :