SELANGOR

பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் சேகரிப்பு திட்டத்தைத் தீவிரப்படுத்தும் சிலாங்கூர்

 ஷா ஆலம், மார்ச் 6: மாநிலம் முழுவதும் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் சேகரிப்பு திட்டத்தை தீவிரப்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் RM165,000 ஒதுக்கீடு செய்துள்ளது.

நுகர்வோர் விவகார எஸ்கோ முகமட் ஜவாவி அஹ்மட் முக்னி கூறுகையில், இந்த நிதி 12 உள்ளூர் அதிகாரசபைக்கும் (PBT) ஒன்பது மாவட்ட இஸ்லாமிய மத அலுவலகங்களுக்கும், (பெயிட் PAID) வழங்கப்படும் என்றார்.

“சமையல் எண்ணெய் சேகரிப்பு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, மாநில அரசு ஒவ்வொரு பிபிடி மற்றும் பெயிட்க்கும் ஒதுக்கீடுகளை வழங்க முடிவெடுத்துள்ளது.

“ஒவ்வொரு உள்ளூர் அதிகாரச்சபைக்கும் RM10,000 மற்றும் ஒன்பது மாவட்ட இஸ்லாமிய மத அலுவலகங்களுக்கு RM5,000 ஒதுகீட்டை, பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த வழங்கப்படும் என முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்கள், உணவக வியாபாரிகள், சிற்றுண்டிச்சாலை நடத்துபவர்கள் ஆகியோரை இலக்காகக் கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டது என்றார்.

“இந்த திட்டம் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் மற்றும் மறுசுழற்சி செய்வதை மக்கள் அன்றாட வாழ்வில் நடைமுறை படுத்துவதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.


Pengarang :