SELANGOR

ஸ்கிம் மெஸ்ர உசிய எமாஸ் (SMUE) மற்றும் ஸ்கிம் மெஸ்ர இன்சான் இஸ்திமேவா (SMIS) திட்டங்களுக்கான விண்ணப்ப கவுண்டர் திறப்பு

ஷா ஆலம், மார்ச் 6: பண்டார் உத்தாமா தொகுதியில் ஸ்கிம் மெஸ்ர உசிய எமாஸ் (SMUE) மற்றும் ஸ்கிம் மெஸ்ர இன்சான் இஸ்திமேவா (SMIS) திட்டங்களுக்கான விண்ணப்ப கவுண்டர் மார்ச் 8 முதல் 10 வரை திறக்கப்பட்டுள்ளது.

அதன் ஒருங்கிணைப்பு அதிகாரி ஹனிஸ் முகமட் கூறுகையில், டாமன்சரா உத்தாமாவில் உள்ள SS21 பல்நோக்கு மண்டபத்தில் இந்த கவுண்டர் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும்.

“மாநில அரசு வழங்கும் பல்வேறு திட்டங்களுக்கு ஏராளமான குடியிருப்பாளர்கள் விண்ணப்பிக்க வருவதால், எங்கள் அலுவலகத்தில் அடிக்கடி நெரிசல் ஏற்படுகிறது.

“அந்த காரணத்திற்காக, நாங்கள் இத்திட்டங்களுக்கு ஒரு விசாலமான இடத்தில் கவுண்டரைத் திறந்தோம்,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

ஹனிஸின் கூற்றுப்படி, ஸ்கிம் மெஸ்ர ஊசிய எமாஸ்க்கு 2,000க்கும் மேற்பட்ட புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் பிப்ரவரி வரை, 3,800க்கும் மேற்பட்ட பெறுநர்கள் ஜோம் ஷாப்பிங் வவுச்சர்களை பெற்றுள்ளனர்.


Pengarang :