NATIONAL

ட்ரோன்கள் மூலம் 20 நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏழு அணைகள் கண்காணிக்கப்படுகின்றன

ஷா ஆலம், மார்ச் 7: சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (லுவாஸ்) மாநிலம் முழுவதும் உள்ள 20 நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏழு அணைகள் பொறுப்பற்ற தரப்பினர்களால் ஆக்கிரமிக்கப் படாமல் இருக்க ட்ரோன்களை பயன்படுத்துகிறது.

பொறுப்பற்ற தரப்பினர்களின் வழிகளை அடையாளம் காண பாதுகாக்கப்பட்ட அப்பகுதிகளில் ட்ரோன்கள் தொடர்ந்து பறக்க விடப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு குளம் மற்றும் அணையிலும் ட்ரோன்களைப் பயன்படுத்தி லுவாஸ் ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 28 முறை கண்காணிப்பு நடத்துகிறது.

“இருப்பினும், தேவைகள், புகார்கள் மற்றும் சிக்கல்கள் ஏதும் இருந்தால் கூடுதல் கண்காணிப்பு செய்யப்படுகிறது,” என்று சிலாங்கூர்கினியிடம் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், உலு சிலாங்கூரில் உள்ள சுங்கை திங்கி அணையில் இறுதியாக பிப்ரவரி 18 அன்று, ட்ரோனைப் பறக்க விட்டதாகவும், ஆனால்,  ஊடுருவல் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் லுவாஸ் கூறியது.

பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறி நுழைவது கண்டறியப்பட்டால் எந்தவொரு நபரிடமும் சமரசம் செய்ய மாட்டோம் என்றும் சம்பந்தப்பட்ட நிறுவனம் உறுதியளித்தது.

லுவாஸ் சட்டம் 1999, பிரிவு 48 இன் கீழ், மாநிலத்தில் உள்ள ஏரிகள், பன்னிரண்டு சுரங்கங்கள், ஏழு அணைகள் மற்றும் 20 குளங்களைப் பாதுகாக்க லுவாஸ் அரசிதழ் வெளியிட்டது.

சிலாங்கூரில் கூடுதல் நீர் ஆதாரமாக இருக்கும் அந்த நீர் நிலைகளின் தரம் மற்றும் அளவுக்கு உத்தரவாதம் அளிக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட குளங்கள் மற்றும் அணைகள் எந்த விதமான இடையூறுகளிலிருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும்.


Pengarang :