SELANGOR

3,500 மாணவர்கள்  பள்ளிக்குத் திரும்பும் உதவியாக RM100 பெறுவர் – பாயா ஜாராஸ் தொகுதி

சுங்கை பூலோ, மார்ச் 13: பாயா ஜாராஸ் தொகுதியில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த (B40) மொத்தம் 3,500 மாணவர்கள் RM100 பள்ளிக்குத் திரும்ப உதவி பெறுவர்.

முதல் கட்டமாக 800 வவுச்சர்கள் வழங்கப்படும் என அதன் பிரதிநிதி கைருடின் ஒத்மான் தெரிவித்தார்.

“முதல் கட்டமாக நாங்கள் 800 வவுச்சர்களைப் பெறுநர்களுக்கு வழங்குவோம், இரண்டாவது கட்டமாகத் தாமான் சௌஜானா உதாமாவில் வவுச்சர்கள் வழங்கப்படும்.

இளம் தலைமுறை எஸ்கோ, பாயா ஜாராஸ் தொகுதியில் நிகழ்ச்சியை வெற்றியடையச் செய்வதற்காக RM200,000 ஒதுக்கப்பட்டதாக கூறினார்.

ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகளுக்குப் பள்ளிக்குச் செல்லும் உதவித் தொகை வழங்கப்பட்டதாகவும், அதிகமான சிலாங்கூர் குடிமக்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைவதை உறுதி செய்வதற்காகவே இந்த விதி உருவாக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

“நாங்கள் பொதுமக்களிடமிருந்து மிகவும் ஊக்கமளிக்க்கும் அளவில் ஆதரவைப் பெற்றோம். ஆனால் B40 குழுவிற்கும், சமீபத்திய திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி வழங்குவதில் முன்னுரிமை அளிக்கிறோம்.

“RM4,000 குடும்ப வருமானம் கொண்டவர்கள், ஆனால் பல குழந்தைகளை உடையவர்கள் பள்ளிக்குத் திரும்புவதற்கான உதவியைப் பெறுவதையும் நாங்கள் பரிசீலிப்போம்,” என்று அவர் கூறினார்


Pengarang :