SELANGOR

தனித்து வாழும் தாய் தனது மகன் பள்ளிக்குத் திரும்பும் உதவி பெற்றதில் மகிழ்ச்சி அடைந்தார்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 13: சிலாங்கூர் அரசாங்கத்திடம் இருந்து பள்ளிக்குத் திரும்பும் உதவி பெறுபவர்களில் ஒருவராக தனது மகன் தேர்ந்தெடுக்கப் பட்டதையடுத்து, தனித்து வாழும் தாய்  ஒருவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

38 வயதான ஜூலியானா இட்ருஸ், 100 ரிங்கிட் நன்கொடையானது தனது மகனுக்குப் பள்ளிப் பொருட்களை வாங்குவதில் தனது சுமையை குறைத்ததாகக் கூறினார்.

“ஒரு சிலருக்குக் கிடைத்த இந்த உதவி பெரிதாக இருக்காது, ஆனால் இன்னும் நான்கு குழந்தைகள் பள்ளியில் படிக்கும் எனக்கு அது மிகவும் மதிப்புமிக்கது,

“எங்கள் மீது அக்கறை காட்டும்  மாநில அரசுக்கு நன்றி, இந்த உதவி எதிர்காலத்திலும் தொடரட்டும்” என்று ஆறு குழந்தைகளுக்குத் தாயான அவர் கூறினார்.

இதற்கிடையில், இல்லத்தரசி நோர்லிசா அப்துல்லா (32), தனது இரண்டு குழந்தைகள் பள்ளிக்கு திரும்பும் உதவி பெறத் தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்..

“இந்த உதவி சரியான நேரத்தில் வழங்கப்பட்டுள்ளது, ஏனெனில் பள்ளி அமர்வு விரைவில்  தொடங்கப்படவுள்ளது, குழந்தைகளின் பள்ளி உபகரணங்களை வாங்க  இந்த  பணம் மிக  உதவியாக இருக்கும்.

“தனது  இரண்டு குழந்தைகளுக்கு உதவி கிடைத்தால், தாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், அதற்கு. சிலாங்கூர் அரசுக்கு நன்றி” என்று அவர் கூறினார்.


Pengarang :