SELANGOR

மலிவு விற்பனை திட்டத்தில் கோழி இறைச்சி, இறைச்சி மற்றும் முட்டைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுக்கோள்

கிள்ளான், மார்ச் 14: சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டுக் கழகத்திடம் (பிகேபிஎஸ்) ரம்டான் முழுவதும் மலிவு விற்பனை (JER) திட்டத்தில் இறைச்சி கோழிகள்,  இறைச்சி மற்றும் முட்டைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

மேரு தொகுதி உறுப்பினரின் சிறப்பு அதிகாரி (ADN) நோர்லேனா நயன், நோன்பு மற்றும் ஈத் பண்டிக்கை காலங்களில் இம்மூன்று பொருட்களுக்கு அதிக தேவை இருப்பதால் இந்த முன்மொழிவு செய்யப்பட்டது என்றார்.

“இப்பொருட்களைச் சேர்க்க முடிந்தால், அதிக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், குறிப்பாக மேரு தொகுதியில் பயனடைய முடியும்,” என்று அவர் இன்று தாமான் ஸ்ரீ பெரேபட்டில் உள்ள மேரு தொகுதி அலுவலகத்தில் சந்தித்தபோது கூறினார்.

இந்த ரமடான் காலம் முழுவதும், மேரு தொகுதி மக்கள் சேவை மையம் வாரத்திற்கு இரண்டு முறை மலிவு விற்பனையை நடத்த திட்டமிட்டுள்ளதாக நார்லேனா கூறினார்.

“நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம், ஆனால், சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டுக் கழகத்தின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம்,” என்று அவர் விளக்கினார். கடந்த ஜனவரி முதல் இன்று வரை 15 முறை இந்நிகழ்வு மேரு தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Pengarang :