SELANGOR

சிலாங்கூர் மலிவு விற்பனை திட்டத்தில் இணைந்தது முதல் வியாபாரி ஒருவருக்கு வருமானம்  அதிகரித்துள்ளது

கிள்ளான், மார்ச் 15: கடந்த ஆண்டு தொடக்கத்தில் மலிவு விற்பனை திட்டத்தில் இணைந்தது முதல் தனது விற்பனை நாளொன்றுக்கு 200 கப்களைத் தாண்டியதற்குச் சுவைப் பான  வியாபாரி தனது  நன்றியை தெரிவித்தார்.

60 வயதான சுல்கிவ்லி ஜோஹாரி, தான் ஒன்பது வகை சுவை பானங்களை விற்பனை செய்வதாகவும், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வியட்நாமிய காபி மற்றும் கப்புசினோவை விரும்பி வாங்குவர் என்றும் தெரிவித்தார். மேலும், கிரீன் டீ மற்றும் சாக்லேட் ஆகியவை RM 5 முதல் RM13 வரை விற்கப்படுவதாகவும் கூறினார்.

“நான் இந்த காபி ஸ்டாலை மகனுடன் நடத்துகிறேன். மலிவு விற்பனை திட்டத்தில் இணைந்ததிலிருந்து நான்கு மணி நேரத்திற்குள் நூற்றுக்கணக்கான கப்கள் விற்கப்படுகின்றன. இதனால், விற்பனை அதிகரித்துள்ளது.

“அனைத்து தரப்பினருக்கும், குறிப்பாகச் செமெந்தா தொகுதியின் சமூகச் சேவை மையம் மற்றும் சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகத்துக்கு (PKPS)  நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

தனது வணிகம் கோவிட் -19 தொற்றுநோயால் வீழ்ச்சியடைந்ததை சுல்கிஃப்லி ஒப்புக்கொண்டார். ஆனால் இப்போது அவர் கோபி கோயாங் பிராண்டைப் பயன்படுத்தி பல்வேறு சுவையான பானங்களைத் தொடர்ந்து விற்பனை செய்து உயர்ந்துள்ளார்.


Pengarang :