SELANGOR

ஆறு உள்ளாட்சி நிர்வாகப் பகுதிகளில் (பிபிடி) வசிப்பவர்களுக்கு மொத்தம் 237,502 குப்பை தொட்டிகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளன

ஷா ஆலம், மார்ச் 16: 2017 ஆம் ஆண்டு முதல் ஆறு உள்ளாட்சி நிர்வாகப் பகுதிகளில் (பிபிடி) வசிப்பவர்களுக்கு மொத்தம் 237,502  குப்பை தொட்டிகள் இலவசமாக விநியோகிக்கப் பட்டுள்ளன என்று   ஊராட்சி மன்றங்கள், பொது போக்குவரத்து, புதுக் கிராம மேம்பாடு எக்ஸ்கோ தெரிவித்துள்ளது.

ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ), பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (எம்பிபிஜே), செலாயாங் மாநகராட்சி (எம்பிஎஸ்), உலு சிலாங்கூர் மாநகராட்சி (எம்பிஹெச்எஸ்), கோலா சிலாங்கூர் மாநகராட்சி (எம்பிகேஎஸ்) மற்றும் கோலா லங்காட் மாநகராட்சி ஆகியவை சம்பந்தப்பட்ட பிபிடி என்று இங் ஸீ ஹான் ஊராட்சி மன்றங்கள், பொது போக்குவரத்து, புதுக் கிராம மேம்பாடு ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்

“மொத்தம், RM12.85 மில்லியன் செலவில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு மொத்தம் 237,502 குப்பைத் தொட்டிகள் விநியோகிக்கப்பட்டன.

நேற்று சிலாங்கூர் மாநிலச் சட்டமன்ற அமர்வில் இலவச MGB120 லிட்டர் குப்பைத் தொட்டிகளை வழங்குவது தொடர்பான பந்திங் பிரதிநிதி லாவ் வெங் சானின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

லெம்பா ஜெயா பிரதிநிதி ஹனிசா மொஹமட் தல்ஹாவின் கூடுதல் கேள்விக்குப் பதிலளித்த ஸீ ஹான் அந்தந்த நிர்வாகப் பகுதிகள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு முயற்சியாக தொட்டிகளை நன்கொடையாக வழங்குவதாகத் தெரிவித்தார்.


Pengarang :