SELANGOR

காப்பார் மருத்துவமனையின் கட்டுமான பணி 2026 இல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது

கிள்ளான், மார்ச் 19: இங்குள்ள தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் நோயாளிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க உதவும் காப்பார் மருத்துவமனையின் கட்டுமான பணி 2026 இல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ், அண்மையில் நாடாளுமன்ற அமர்வின் போது, சுகாதார   துணை அமைச்சர் லுகானிஸ்மன் அவாங் சௌனியின் கவனத்துக்கு இந்த விவகாரம் கொண்டு வரப் பட்டதாகக் கூறினார்.

“காப்பார் மருத்துவமனை இந்தப் பகுதிக்கு (பண்டார் புக்கிட் ராஜா) மிக அருகில் உள்ளது, அதை மேம்படுத்தினால், அது தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் ஏற்படும் கடுமையான நெரிசலைக் குறைக்கும்.

“இந்த விஷயத்தை நான் பாராளுமன்றத்தில் எழுப்பினேன், காப்பார் மருத்துவமனை 2026 இல் கட்டி முடிக்கப்படும் என்று துணை சுகாதார அமைச்சர் பதிலளித்தார்,” என்று அவர் பண்டார் புக்கிட் ராஜாவின் சைம் டார்பி விற்பனை காட்சியகத்தில் நடைபெற்ற கயுஹான் மென்ஜுன்ஜோங் காசிஹ் 2022 நிகழ்வு முடித்த பிறகு கூறினார்.


Pengarang :