SELANGOR

புக்கிட் காசிங் தொகுதி பொதுமக்களைப் பிங்காஸ் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது

ஷா ஆலம், மார்ச் 23: புக்கிட் காசிங் தொகுதியின் சமூகச் சேவை மையம் (பிகேஎம்) குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை பிங்காஸ் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது.

புக்கிட் காசிங் தொகுதியின் செயலாளர் (ADN), இதுவரை 170 குடும்பங்கள் மட்டுமே மாதாந்திர உதவியாக RM300 பெற்றுள்ளனர், அதே சமயம் தொகுதிக்கு 506 குடும்பங்களுக்கான ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

” மார்ச் 25 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரை புக்கிட் காசிங் ஏற்பாடு செய்துள்ள நடமாடும் கவுண்டர் நிகழ்வின் போது இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதுமட்டுமில்லாமல், பொதுமக்கள் புக்கிட் காசிங் தொகுதியின் சமூகச் சேவை மையத்தையும் நாடலாம்.

(கிஸ்) திட்டத்திற்குப் பதிலாகப் பிங்காஸ் திட்டம் மாநில அரசால் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு RM108 மில்லியன் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இல்திசம் சிலாங்கூர் பென்யாயாங்கின் 44 ஊக்கத்தொகைகளின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த திட்டம், “Wavpay e-wallet“ செயலி மூலம் மாதத்திற்கு RM300 வழங்கப்படும் அல்லது வருடத்திற்கு RM3,600 மாதாந்திர உதவியைப் பெற அனுமதிக்கிறது.

அதற்கான தகுதிகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிலாங்கூரில் வசிக்க வேண்டும் மற்றும் சிலாங்கூர் வாக்காளராக இருத்தல் வேண்டும், RM3,000க்கும் குறைவான குடும்ப வருமானம், பள்ளியில் குறைந்தபட்சம் இரண்டு குழந்தைகள் பயில வேண்டும் மற்றும் சமூக நலத் துறையிலிருந்து (JKM) மாதாந்திர உதவி மற்றும் சிலாங்கூர் சக்காட் வாரிய (LZS) உதவிகளைப் பெறாதவராக இருத்தல் வேண்டும்.


Pengarang :