SELANGOR

கிள்ளான் மற்றும் ஷா ஆலம் பகுதிகளில் நீர் விநியோகத் தடை

ஷா ஆலம், மார்ச் 25: பெங்குருசான் ஆயர் சிலாங்கூர், தாமான் முத்தியாரா புக்கிட் ராஜா 2, கிள்ளான் பகுதியில் உடைந்த குழாய்களைச் சரி செய்யும் பணியைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

நேற்று இரவு 10.00 மணி முதல் கிள்ளான் மற்றும் ஷா ஆலம் பகுதிகளில் உள்ள 55 பகுதிகளில் சீரமைப்பு பணியின் காரணமாகத் திட்டமிடப்படாத தண்ணீர் விநியோகம் தடைபட்டதாக ஏஜென்சி தெரிவித்துள்ளது.

இன்று காலை 6 மணிக்குச் சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. பழுது பார்க்கும் பணி முடிந்ததும் நீர் வழங்கல் அமைப்பு உறுதிப்படுத்தப்படும்போது நீர் கட்டங்கட்டமாக விநியோகிக்கப்படும்.

மருத்துவமனைகள், கிளினிக்குகள், டயாலிசிஸ் மையங்கள் மற்றும் இறுதிச் சடங்குகள் போன்ற முக்கியமான வளாகங்களுக்கு முன்னுரிமை அளித்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தண்ணீர் லாரிகளை அனுப்பியதாக ஆயர் சிலாங்கூர் தெரிவித்துள்ளது.

“இந்த இடையூறு காலம் முழுவதும் போதுமான அளவு நீரை வைத்திருக்கவும் மற்றும் அதை கவனமாக பயன்படுத்தவும் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்துகிறது ஆயர் சிலாங்கூர்.”

திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடைகள் தொடர்பான தகவல்களை ஆயர் சிலாங்கூர் செயலி, முகநூல் மற்றும் www.airselangor.com இல் உள்ள உதவி மையத்தின் மூலம் பெறலாம்.


Pengarang :