SELANGOR

கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை அவசர பிரிவில் காத்திருப்பதை குறைக்க கிளாஸ்டர் முன்னோடி திட்டம் (எச்டிஏஆர்)

ஷா ஆலம், மார்ச் 27: கடந்த சனிக்கிழமை கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் அவசர பிரிவு, நீண்ட காத்திருப்பு பிரச்சனையை சமாளிக்க கிளாஸ்டர் முன்னோடி திட்டத்தை (எச்டிஏஆர்) தொடங்கியது.

பண்டார் பொட்டானிக் ஹெல்த் கிளினிக் (கேகே) உடனான ஒத்துழைப்பு மூலம் மிதமான அறிகுறிகள் மற்றும் அவசரம் இல்லாத நோயாளிகள் உடனடி சிகிச்சை பெற அனுமதிக்கிறது என்று சுகாதார அமைச்சர் கூறினார்.

“கேகே பண்டார் பொட்டானிக், பொது விடுமுறை நாட்கள் உட்பட ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 9.30 மணி வரை செயல்படுகிறது. நோயாளிகள் பதிவு செய்யும் நேரம் இரவு 9 மணி வரை மட்டுமே” என்று டாக்டர் ஜாலிஹா முஸ்தபா கூறினார்.

இந்த நடைமுறை அவசர சிகிச்சைப் பிரிவில் நெரிசலைக் குறைக்கும் என்று அவர் நம்புகிறார்.

திட்டத்தை விரிவு படுத்தும் முன், முன்னோடித் திட்டத்தின் வளர்ச்சியை மலேசியச் சுகாதார அமைச்சகம் (கேகேஎம்) கண்காணிக்கும் என்றும் அவர் கூறினார்.


Pengarang :