SELANGOR

சபாக் பெர்ணம் மேம்பாட்டுத் திட்டம் (சப்டா) வேலை வாய்ப்புகளை உருவாக்கும்

ஷா ஆலம், மார்ச் 28: சபாக் பெர்ணம் பகுதி மேம்பாட்டுத் திட்டம் (சப்டா) செயல் பாடு, வேலை வாய்ப்புகளை உருவாக்கி, மாவட்டத்தில் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும்.

சபாக் பிரதிநிதி அஹ்மத் முஸ்டைன் ஓத்மான், முதல் சிலாங்கூர் திட்டத்தில் (RS-1) உள்ள தொழில்துறை மேம்பாட்டுக்கான திட்டங்களின் செயல்பாடுகள்  முதியோருக்கான மாவட்டம் சபாக் பெர்ணம் எனும்  அடையாளத்தை  நீக்கிவிடும் என்று விளக்கினார்.

“இப்போதெல்லாம் முதியவர்கள் வசிக்கும் இடம் சபாக் பெர்ணம் என்று பலர் சொல்கிறார்கள். இங்கு வேலை வாய்ப்புகள் இல்லாததால் இந்த சிக்கலை எதிர்கொள்கிறோம்.

“பல இளைஞர்கள் வாழ்வாதாரத்திற்காக மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டியுள்ளது. பள்ளிகளில் அதிக மாணவர்கள் இல்லை,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

அஹ்மத் கூற்றுப்படி, RM1.9 பில்லியன் முதலீடு மதிப்புள்ள இத்திட்டம் சிறந்த வருவாய் தருவதை உறுதி செய்ய, சப்டாவைச் செயல்படுத்த மாநில அரசுக்கு உதவ அவரது தரப்பு தயாராக உள்ளது.

இந்த திட்டமானது சபாக் பெர்ணமை ஒரு முன்னணி விவசாய மாவட்டமாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் விளக்கினார்.

கடந்த ஆண்டு ஜூலையில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் 1,317 ஹெக்டேர் பரப்பளவில் அதிக மதிப்புள்ள பயிர்களை பயிர் செய்வதை உள்ளடக்கியது. இதன் மூலம் வருடத்திற்கு RM248 மில்லியன் மகசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :