SELANGOR

டிஜிட்டல் தொழில் முனைவோர் சமையல் கலை திட்டத்தின் மூலம் வருமானம் ஈட்ட வாய்ப்பு

ஷா ஆலம், மார்ச் 29: பண்ட மாறன் தொகுதி (DUN), குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் (B40) டிஜிட்டல் தொழில் முனைவோர் சமையல் கலை திட்டத்தின் மூலம் வருமானம் ஈட்ட வாய்ப்பு வழங்கியுள்ளது.

யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா) உடன் இணைந்து இந்த திட்டத்தின் வழி வேலை இழந்தவர்களுக்கு உதவுவதாக அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தோனி லியோங் துக் சீ கூறினார்.

“ஹிஜ்ராவுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இத்திட்டமானது மூலப்பொருள் உபகரணங்கள், சமையல் வகுப்புகள் மற்றும் உணவு விநியோக பயன்பாடுகளைப் பயன்படுத்தும் முறைகள் ஆகியவற்றிற்கு உதவி வழங்கும் நோக்கத்தை கொண்டுள்ளது.

“மாநில அரசு ஏற்கனவே இந்த தளத்தை (உணவு விநியோக பயன்பாடு) அமைத்துள்ளது. நாங்கள் மூலப்பொருட்களை விநியோகிக்க உதவுகிறோம் மற்றும் இத்திட்டத்தில் பங்கேற்பவர்கள் வீட்டில் சமைத்து மட்டும்தான் கொடுக்க வேண்டும். அதன்பின் உணவு விநியோகிக்கும் நபர்கள் சமைத்த உணவை விநியோகம் செய்வர் ,” என்று அவர் கூறினார்.

முதன் முறையாக ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்ச்சியில் 500 தனிநபர்கள் பங்கேற்கும் இலக்கை எட்டுவதை உறுதி செய்ய தகுதியான குடும்பங்களை உடனடியாக அடையாளம் காணுமாறு கிராமத் தலைவரை தோனி லியோங் கேட்டுக் கொண்டார்.

“சமீபத்தில் நான் அனைத்து கிராம தலைவர்களையும் அழைத்தேன், ஏனென்றால் நாங்கள் செயல்படுத்த விரும்பும் கருத்தை முதலில் கிராமத் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

“அதற்குப் பிறகு, இந்தத் திட்டத்தில் பங்குபெற தகுதியான ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களை அவர்களால் அடையாளம் காண முடியும். இந்த திட்டத்தை விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.


Pengarang :