SELANGOR

கிள்ளான், ரவாங், கோலசிலாங்கூர் சாலை செப்பனிடும் பணி மேற்கொள்ளப்பட்டது – இன்ஃப்ராசெல்

ஷா ஆலம், மார்ச் 29: இன்ஃப்ராசெல் எஸ்டிஎன் பிஎச்டி மார்ச் 23 அன்று கிள்ளான் மாவட்டத்தில் சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொண்டது.

இன்ஃப்ராசெல் @infrasel_kjp என்ற ட்விட்டர் பக்கத்தில் புகார் வந்ததையடுத்து, ஜாலான் பெர்சியாரான் சுங்கை பினாங் பண்டமாறன் சாலை சம்பந்தப்பட்ட பழுது பார்க்கும் பணி மேற்கொள்ளப் பட்டதாக மாநிலச் சாலை பராமரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘ஸ்டோன் மாஸ்டிக் அஸ்பால்ட் 20’ (SMA20) முறையைப் பயன்படுத்தி சாலை பழுது பார்க்கும் பணி ஜாலான் ரவாங், ரவாங் II, கோலா சிலாங்கூர் ஆகிய இடங்களில் அதே தேதியில் பணி மேற்கொள்ளப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை பணியில் முன்னேற்றம் 50 சதவீதத்தை எட்டியுள்ளது என்று அவர் ட்விட்டரில் தெரிவித்தார்.

ஜனவரி 15 அன்று, டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, மாநில நிர்வாகத்தின் கீழ் உள்ள சாலைகளை பராமரித்தல் மற்றும் விரிவுப்படுத்துதல் உள்ளிட்ட செப்பனிடும் திட்டங்களுக்கு RM50 மில்லியன் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார்.

முன்னதாக, உள்கட்டமைப்பு மற்றும் வேளாண்மை எஸ்கோ ஐஆர் இஷாம் அசிம், பயனர்களின் வசதிக்காக இந்த மார்ச் மாதம் முதல் மாநிலம் முழுவதும் பெரிய அளவிலான சாலை சீரமைக்கும் பணி செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

அவரது கருத்துப்படி, சிலாங்கூர் பட்ஜெட் 2023ன் மூலம் RM50 மில்லியன் செலவில் மேற்கொள்ளப் படும் இத்திட்டமானது உள்ளூர் அதிகாரசபை (PBT) நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து சாலைகளையும் உள்ளடக்கியது.


Pengarang :