SELANGOR

சொந்த உணவுக் கொள்கலன்களைக் கொண்டு வரும் முதல் 200 வருகையாளர்களுக்குத் தலா RM10 மதிப்புள்ள உணவுக் கூப்பன்கள்

சுபாங் ஜெயா, ஏப்ரல் 5: பிகே 5, பண்டார் கின்ராராவில் நடைபெற்ற ரம்லான் பஜாருக்கு வருகை புரிந்து சொந்த உணவுக் கொள்கலன்களைக் கொண்டு வந்த முதல் 200 வருகையாளர்களுக்குத் தலா RM10 மதிப்புள்ள உணவுக் கூப்பன்கள் வழங்கப்பட்டன.

கின்ராரா தொகுதி உறுப்பினர் இங் ஸீ ஹான், இந்த கூப்பனை ரம்லான் பஜாரில் உணவு வாங்க பயன்படுத்தலாம் என்றார்.

“இந்த திட்டம் எங்கள் லவ் தி எர்த் பிரச்சாரத்திற்கு ஏற்ப வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த உணவு கொள்கலன்களைக் கொண்டு வருவது பிளாஸ்டிக் இல்லாத கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.

“உணவு கூப்பன்களை வழங்குவது, உணவு வாங்குவதற்காக தங்களுடைய சொந்த உணவு கொள்கலன்களை கொண்டு வரும் பயனீட்டாளர்களின் நடவடிக்கையை ஆதரிப்பதற்கான ஒரு திட்டமாகும்,” என்று கூறினார்.

100 கூப்பன்கள் எம்பிஎஸ்ஜே மூலம் வழங்கப்பட்டதாகவும், மற்ற 100 கூப்பன்கள் ஏடிஎன் கின்ராரா அலுவலகத்தில் இருந்து வந்ததாகவும் மாநில அரசின் எஸ்கோவாக இருக்கும் இங் ஸீ ஹான் கூறினார்.

சுற்றுச்சூழல் நிலைத்தன்மை பிரச்சாரத்தை ஆதரிப்பதற்காக பயனீட்டாளர்களின் ஆர்வத்தை ஈர்க்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் உணவுக் கொள்கலன்களைக் கொண்டு வரும் முதல் 100 பயனீட்டாளர்களுக்கு RM10 மதிப்புள்ள உணவு கூப்பன்கள் விநியோகிக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதாக எம்.பி.எஸ்.ஜெ முன்பு தெரிவித்தது.


Pengarang :