SELANGOR

சிப்பாங், பூச்சோங்  பகுதிகளில்  புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு RM500 நிதியுதவி 

ஷா ஆலம், ஏப்ரல் 10: ஐடில்பித்ரியை முன்னிட்டு சிப்பாங் மற்றும் பூச்சோங்கில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு RM500 நிதியுதவி அளிக்கும்.

பண்டிகையை கொண்டாடுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு  இயற்கை சீற்றத்துக்கு உள்ளான மக்கள்களின் சுமையைக் குறைக்க இந்த நன்கொடை என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இன்று சிலாங்கூர் பொது நூலகக் கழகத்தில் (பிபிஏஎஸ்) சிலாங்கூர் கல்வி இயக்கம் மற்றும் மூலோபாய திட்டமிடல் பட்டறையை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்த பிறகு, “வழக்கமாக 500 ரிங்கிட் உதவித்தொகை, பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் விநியோகிப்போம்,” என்றார்.

சம்பவம் நடந்த உடனேயே சம்பந்தப்பட்ட இடத்தில் பாதிக்கப்பட்டோரின் குடியிருப்பை அதிகாரிகள் உடனடியாக சரி செய்தனர். ஆனால் செலவு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) அல்லது எம்பிஐ பாதிக்கப்பட்ட 122 வீடுகளில் பாதியைச் சரிசெய்ய RM300,000 ஒதுக்கீடு செய்தது.


Pengarang :