SELANGOR

16 உரிமம் இல்லாத வணிக வளாகங்கள் கண்டறியப்பட்டன – அம்பாங் ஜெயா நகராட்சி

ஷா ஆலம், ஏப்ரல் 11: அம்பாங் ஜெயா நகராட்சி (எம்பிஏ ஜே) நடத்திய நடவடிக்கையில் நேற்று அம்பாங்கில் உள்ள ஜாலான் பெர்மாய் டி, தாசிக் பெர்மாய் மற்றும் பெரெம்பாங் இண்டா அபார்ட்மென்ட்களில் மொத்தம் 16 உரிமம் இல்லாத வணிக வளாகங்கள் கண்டறியப்பட்டன.

மக்கள் தொடர்பு பிரிவு மற்றும் அம்பாங் ஜெயா நகராட்சி செயலகம் ஆகியவை, அனுமதியின்றி வெளிநாட்டினரை பணியமர்த்துவதற்கான குற்றத்திற்காக அபராதம் வெளியிட்டது.

இந்த நடவடிக்கையில் மொத்தம் 30 வணிக வளாகங்கள் சோதனை செய்யப்பட்டதில் 16 உரிமம் இல்லாமல் இயங்கியது கண்டறியப்பட்டது.

“அதில் எட்டு வளாகங்கள் ஜாலான் பெர்மாய் டியிலும், மற்ற எட்டு பெரெம்பாங் இண்டா அடுக்குமாடி குடியிருப்புகளிலும் உள்ளன. அதே நேரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை சுற்றி உள்ள கடைகளுக்கு அபராதங்கள் வழங்கப்பட்டது” என்று ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அமலாக்க நடவடிக்கைகள் வர்த்தகம், வணிகம் மற்றும் தொழில்துறை உரிம விதிகள் (எம்பிஏஜே) 2007 மற்றும் உணவு நிறுவன உரிம விதிகள் (எம்பிஏ ஜே) 2007 ஆகியவற்றின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.

“அம்பாங் ஜெயா நகராட்சி நிர்வாகப் பகுதியில், எந்த ஒரு வணிக நடவடிக்கையும் (எம்பிஏஜே) இலிருந்து வணிக உரிமத்தைப் பெற வேண்டும்.

“வணிகர்கள் குறிப்பாக வெளிநாட்டவர்களை கையாள்வதிலும் சட்ட மீறல்களைத் தவிர்ப்பதற்காகவும் அமைக்கப்பட்ட விதிகளுக்கு இணங்கி செயல்பட  அறிவுறுத்தப்படுகிறார்கள்,” .

ஏதேனும் புகார்கள் மற்றும் விளக்கம் அறிய mpaj.spab.gov.my/eApps/system/index.do என்ற முகவரியில் தொடர்புக் கொள்ளலாம்  அல்லது 019-266 8100 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யலாம்.


Pengarang :