SELANGOR

செந்தோசா தொகுதியை சார்ந்த  குறைந்த வருமானம் கொண்ட  500 குடும்பங்களுக்கு (B40) ஐடில்பித்ரி வவுச்சர்கள்

ஷா ஆலம், ஏப்ரல் 12: செந்தோசா தொகுதியில் மொத்தம் 500 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் (B40) ஐடில்பித்ரியை முன்னிட்டு RM200 மதிப்புள்ள ஷாப்பிங் வவுச்சர்களைப் பெற்றன.

பெறுநர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 100,000 ரிங்கிட் தொகையுடன் கூடிய வவுச்சர்களை விநியோகிப்பதாக அதன் பிரதிநிதி டாக்டர் ஜி குணராஜ் தெரிவித்தார்.

” மாநில அரசாங்கத்தால்  வழங்கப்படும்  இவ் வவுச்சர்கள்  பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக வழங்குவதன் மூலம் பெறுநரின் செலவினச் சுமையைக் குறைக்க முடியும் என்று நம்புகிறோம்.

மேலும் கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு ஐடில்பித்ரி பண்டிகை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

 மூன்று வாரங்களுக்கு முன்னரே  இவ் வவுச்சருக்கான பதிவு செய்யப்பட்டது,  இப்பொழுது வவுச்சர்கள் பெறுநர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது  என்றும் அவர் தெரிவித்தார்.

ஜோம் ஷாப்பிங் பெருநாள் (பிராயான்)  என்பது பல்லாயிரக்கணக்கான குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் சுமையை எளிதாக்குவதற்கு மூன்று முக்கிய பண்டிகைகளை முன்னிட்டு வழங்கப்படும் ஒரு உதவியாகும்.

மாநில அரசாங்கம் சிலாங்கூர் பட்ஜெட் 2023 மூலம் சம்பந்தப்பட்ட வவுச்சர்களை வழங்குவதற்காக RM16.48 மில்லியன் ஒதுக்கியது.

மாதாந்திர குடும்ப வருமான வரம்பு மாதத்திற்கு RM2,000 லிருந்து RM3,000 ஆக உயர்த்தப்பட்டு மாநிலம் முழுவதும் 82,400 பயனாளிகள் பயனடைந்தனர்.


Pengarang :