SELANGOR

விளையாட்டாளர்களின் போலி சம்பள பட்டியல் – சிலாங்கூர் எஃப்சி சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது

ஷா ஆலாம், ஏப்ரல் 18: சமீபத்தில் சமூக ஊடகங்களில் விளையாட்டாளர்களின் போலி சம்பள விகிதங்கள் பரவியதைத் தொடர்ந்து சிலாங்கூர் எஃப்சி சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக.

இந்த செயலை வன்மையாக கண்டித்து, சிலாங்கூர் எஃப்சி நிர்வாகம் காவல்துறை, தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா அமைச்சகம் மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகளிடம் புகார் அளிக்கும்.

“அப்பதிவின் உள்ளடக்கம் தவறானது மற்றும் அவதூறாகக் கருதப்படுகிறது என்பதை குழு பதிவு செய்ய விரும்புகிறது.

“சமூக ஊடகப் பதிவில் கூறப்படும் சம்பள அளவைக் கொண்டு எந்தவொரு தனிநபரையும் ஆராயும் செயலை நிர்வாகம் கடுமையாக மறுக்கிறது” என்று அறிக்கை கூறுகிறது.

சிலாங்கூர் எஃப்சியின் கூற்றுப்படி, அத்தவறான செய்தி குழுவின் நற்பெயரைச் சேதப் படுத்துவதோடு, தற்போது உள்ள நிலைமைக்கும் சீர்குலைவை ஏற்படுத்தலாம்.

ஒரு வெற்றிகரமான கால்பந்து குழுவாக நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டிருப்பதன் வழி அவர்கள் நல்ல குழுவில் இருப்பதாக அதன் நிர்வாகம் ஆதரவாளர்களுக்கு உறுதியளித்தது.


Pengarang :