SELANGOR

மாநிலம் முழுவதும் பெரியளவில் சேதமடைந்துள்ள சாலைகள் விரைவில் மேம்படுத்தப்படும்

ஷா ஆலம், ஏப். 26: மாநிலம் முழுவதும் பெரியளவில் சேதமடைந்துள்ள சாலைகள் விரைவில் மேம்படுத்தப்படும் என உள்கட்டமைப்பு மற்றும் பொது வசதிகள் எக்ஸ்கோ தெரிவித்துள்ளார்..

இத்திட்டமானது இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் மூலம் 50 மில்லியன் ரிங்கிட் செலவில் மேற்கொள்ளப்படும் என ஐஆர் இஷாம் ஹாஷிம் தெரிவித்தார்.

“ஐடில்பித்ரி கொண்டாட்டத்திற்கு முன்பு நாங்கள் இந்த திட்டத்தை விரிவாக விவாதித்தோம், ஒவ்வொன்றாக ஆய்வு செய்தோம்.

“எனவே மாநில அரசின் சிறப்பு நிதியைப் பயன்படுத்தி இத்திட்டம் செயல்படுத்தப்படும்,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

ஜனவரி 16 அன்று, டத்தோ மந்திரி புசார், மாநில நிர்வாகத்தின் கீழ் உள்ள சாலைகளின் பராமரிப்பு மற்றும் விரிவாக்கத்தை உள்ளடக்கிய ஒரு மெகா சாலை அமைக்கும் திட்டத்தை அறிவித்தார்.

டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, பொதுமக்கள் தங்கள் இடங்களில் சாலைகள் சேதம் ஏற்பட்டால் ட்விட்டர் செயலி மூலம் புகைப்படங்களை அனுப்பி, புகார்களை எழுதி, #infrasel #daerah #namajalan என்ற அடையாளத்தோடு புகாரளிக்குமாறு பொதுமக்களை ஊக்குவித்தார்.

2021 முதல் கடந்த ஆண்டு வரை, மாநில சாலை பராமரிப்பு நிறுவனமான இன்பரசெல் 39,000க்கும் மேற்பட்ட சாலைகளைப் பயனர் வசதிக்காக மேம்படுத்தி உள்ளது.

பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் 24 மணி நேரத்தில் அனைத்து சாலைகளும் சரி செய்யப்பட்டது.


Pengarang :