NATIONAL

லண்டன் மாரத்தான் ஆண்களுக்கான பாரம்பரிய உடை பிரிவில் கின்னஸ் உலக சாதனை (ஜிடபிள்யூஆர்) படைத்தார் தேசிய மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்

கோலாலம்பூர், ஏப்ரல் 25: கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிசிஎஸ் லண்டன் மாரத்தான் 2023 ல் ஆண்களுக்கான பாரம்பரிய உடையணிந்து ஓடும் பிரிவில் அதிவேக ஓட்டப்பந்தய வீரராக உருவெடுத்து கின்னஸ் உலக சாதனையில் (ஜிடபிள்யூஆர்) இடம்பெற்றார் தேசிய மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் முகமட் சியாஹிடன் அலியாஸ்.

முகமட் சியாஹிடன் அல்லது ஈடன் சியா என்று அழைக்கப்படும் அவர், முழுமையான மலாய் உடை, சாம்பின் மற்றும் சொங்கோக் அணிந்து 42 கிலோமீட்டர் மாரத்தான் போட்டியில் இரண்டு மணிநேரம் 49 நிமிடங்கள் 22 வினாடிகள் பதிவு செய்தார்.

அவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவின் மூலம் இந்த வரலாற்று தருணத்தைப் பகிர்ந்துள்ளார்.

கன மழையிலும் குளிரிலும் காத்திருந்து ஆதரவளித்த லண்டனில் உள்ள மலேசியர்களுக்கு ஈடன் சியா தனது நன்றியை தெரிவித்தார்.

guinnessworldrecords.com இன் கூற்றுப்படி, ஈடன் சியா ஒரு முறை ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த பிளாக்மோர்ஸ் ரன்னிங் ஃபெஸ்டிவலில் 2019 இல் 2:54 நிமிடங்களில் தேசியக் கொடி உடையில் வேகமான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரராக உலக சாதனை படைத்தார்.

– பெர்னாமா


Pengarang :