NATIONAL

நிலச்சரிவால் 76 நிர்வாக ஊழியர்கள் பாதிப்பு – மலேசிய ஊழல் எதிர்ப்பு அகாடமி

 கோலாலம்பூர், ஏப்ரல் 26: மலேசிய ஊழல் எதிர்ப்பு அகாடமி (MACA) மற்றும் பெர்சியாரான் துவாங்கு சையத் சிராஜுடினில் உள்ள மலேசிய ஒருமைப்பாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த மொத்தம் 76 நிர்வாக ஊழியர்கள் அப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பதற்றத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

மதியம் 1.54 மணியளவில் இச்சம்பவம் தொடர்பான அவசர அழைப்பு வந்ததை அடுத்து, எட்டு உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகச் செந்தூல் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய நடவடிக்கைகளின் கமாண்டோர் இ யோகேஸ்வரன் தெரிவித்தார்.

“மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு (எம்ஏசிசி) சொந்தமான அகாடமியின் நுழைவாயிலுக்கு முன்னால் நிலச்சரிவு ஏற்பட்டது மற்றும் ஒரு காவலர் குடில் இடிந்து விழுந்தது. நிலச்சரிவின் பரப்பளவு 30.48 x 36.57 சதுர மீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

“36 ஆண்கள் மற்றும் 40 பெண்கள் அடங்கிய 76 பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை, அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

கோலாலம்பூர் நகர மன்றத்தில் மலை பிரிவு, சிலாங்கூர் நீர் விநியோக நிறுவனம் மற்றும் பொதுப்பணித் துறை ஆகியவை அடுத்த நடவடிக்கைக்காக சம்பவ இடத்தில் இருப்பதாக அவர் கூறினார்.

முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், குழாய் உடைந்ததால் நில நகர்வு மேலும் நிகழும் என்று கூறப்படுகிறது.

– பெர்னாமா


Pengarang :