NATIONAL

வான் போக்குவரத்து துறையின் வளர்ச்சிக்கு உதவும் கடப்பாடு அரசுக்கு உள்ளது- தெங்கு ஸப்ருள்

கோலாலம்பூர், ஏப் 26- இந்நாட்டில் வான் போக்குவரத்துத் துறையின்
வளர்ச்சிக்கு உதவும் கடப்பாட்டை அரசாங்கம் கொண்டுள்ளது.
முதலீட்டுக்கான உகந்த முதலீட்டுச் சூழல் மற்றும் நிலையான
வளர்ச்சியை உறுதி செய்வதற்காக அத்துறை சார்ந்த தரப்பினருடன்
அரசாங்கம் தொடர்ந்து அணுக்கமாக செயல்படும்.

வர்த்தக சார்பு மற்றும் முதலீட்டுச் சார்பு நாடாக தன்னை
அடையாளப்படுத்திக் கொள்வதற்குரிய இடத்தில் மலேசியா தற்போது
உள்ளது என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்
த்தோஸ்ரீ ஸப்ருள் அப்துல் அஜிஸ் கூறினார்.

எத்தகைய சவால்கள் வந்தாலும் அவற்றைக் கடந்து மலேசியாவில்
தொழிலியல் உருமாற்றத்தை உருவாக்க நானும் எனது குழுவினரும்
தயாராக உள்ளோம். ஆசியாவிலும் நுழைய விரும்பும் நாடுகளுக்கு பிரதான மற்றும் குறைந்த செலவிலான ஏவு தளமாக மலேசிய சந்தையை உருவாக்க விரும்புகிறோம் என்றார் அவர்.

நேற்று இங்கு நடைபெற்ற ஆசியா டிஜிட்டல் இஞ்சினியரிங் மற்றும்
ஓ.பி.பி. ஆசியா லிமிட் ட் நிறுவனங்களுக்கிடையே ஒப்பந்தம்
கையெழுத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

அபரிமிதமான முதலீட்டு வாய்ப்புகளைக் கொண்ட பழுதுபார்ப்பு,
பராமரிப்புத் துறைகளில் தீவிர ஈடுபாடு காட்ட மலேசியா ஆர்வம்
கொண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :