NATIONAL

ஊடகத் துறையின் தலைமைப் பொறுப்புகளில் மகளிருக்கு குறைவான பிரதிநிதித்துவம்

கோலாலம்பூர், ஏப் 27- உலகலாவிய நிலையில் ஊடகத் துறையில்
அதிகாரமிக்க பொறுப்புகளை வகிப்பதில் தாங்கள் இன்னும் விடுபட்ட
நிலையில் உள்ளதாக பெண்கள் கருதுகின்றனர்.

உலகிலுள்ள பிரசித்தி பெற்ற 240 செய்தி நிறுவனங்களில் உயர் பதவி
வகிக்கும் 180 பேரில் 22 விழுக்காட்டினர் மட்டுமே பெண்கள் என்பதை
ராய்ட்டர்ஸ் கழகம் வெளியிட்ட 2023ஆம் ஆண்டு ஊடகவியல் துறை
மீதான அறிக்கை கூறுகிறது.

ஆயினும், ஊடகவியலாளர்களில் 40 விழுக்காட்டினர் பெண்களாக உள்ளது
ஊடகம் சார்ந்த 12 துறைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது
என்று அது தெரிவித்தது.

இதனிடையே, ஆசிரியர் பிரிவுகளில் தலைமைப் பொறுப்புகளுக்குப்
பெண்கள் நியமனம் குறைவாகவே உள்ளதாக ஆசிய பசிபிக்
வட்டாரத்திற்கான அனைத்துலக ஊடகவியலாளர் 2020ஆம் ஆண்டு தேசியச் செய்தியாளர் சங்கத்தின் அறிக்கைகள் கூறுகின்றன.

மொத்தம் 240 மலேசிய ஊடகவியலாளர்களிடம் எழுப்பப்பட்ட
பணித்தன்மை, வேலைச் சூழல், சம்பளம், பாதுகாப்பு மற்றும் வேலை
பாதுகாப்பு உள்ளிட்ட கேள்விகளின் அடிப்படையில் இந்த அறிக்கை
வெளியிடப்பட்டுள்ளது.

தலைமைச் செயல்முறை அதிகாரி, நிர்வாக அதிகாரி மற்றும் பொது
நிர்வாகி போன்ற பதவிகளின் பங்கேற்பு நிறைவாக இருந்த போதிலும்
ஆசிரியர் பிரிவைப் பொறுத்த வரை இயக்குநர், வட்டார தலைமை நிருபர்,
ஆசிரியர் போன்ற பொறுப்புகளின் அவர்களி பங்கேற்பு மனநிறைவளிக்கும்
வகையில் இல்லை என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Pengarang :