SELANGOR

மலிவு விற்பனையில் கலந்து கொள்பவர்கள் சொந்த பைகளைக் கொண்டு வர ஊக்குவிக்கப்படுகிறார்கள்

ஷா ஆலம், மே 2: இன்று பண்டார் உத்தாமா தொகுதியில் நடைபெறும் மலிவு விற்பனைக்கு வருகை தரும் மக்கள் தங்கள் சொந்த பைகளைக் கொண்டு வர ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

அதன் பிரதிநிதி ஜமாலியா ஜமாலுடின் கூறுகையில், பிளாஸ்டிக் பைகளை இனி பயன்படுத்தாமல் இருக்க பழக்கப்படுத்தி கொள்வதுடன் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் பாதுகாப்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

“15 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள குடிமக்களுக்கு சிலாங்கூர் அரசாங்கத்தின் மற்றொரு சிறப்பு திட்டத்தை ஜெலஜா ஏசான் ரக்யாட் செயல் படுத்தவுள்ளது.

“சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மக்கள் தங்கள் சொந்த பைகளைக் கொண்டு வர ஊக்குவிக்கப்படுகிறார்கள், #kempenbebasplastikbeg,” என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

இந்நிகழ்வு இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கம்போங் செம்பாக்கா கூடைப்பந்து மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை மூன்று மாதங்களுக்குச் செயல்படுத்தப்பட்ட இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சிலாங்கூர் குடியிருப்பாளர்கள் பயனடைந்தனர்.

அதனை தொடர்ந்து மாநில அரசு அத்திட்டத்தை ஜனவரி 15 முதல் மே வரை 1,200 இடங்களில் விரிவுபடுத்தியது.


Pengarang :