SELANGOR

சேதமடைந்த சாலைகளை ஶ்ரீ செத்தியா தொகுதி சரி செய்யும்

பெட்டாலிங் ஜெயா, மே 8: லெம்பா சுபாங் பகுதியைச் சுற்றியுள்ள குண்டும் குழியுமான சாலைகள் மற்றும் சாலை துவாரங்களை  ஶ்ரீ செத்தியா தொகுதி சரி செய்யும்.

அடுத்த வாரம் முதல் மூன்று பகுதிகளில் நடைபாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அதன் சட்டமன்ற உறுப்பினர் ஹலீமி அபுபக்கார் தெரிவித்தார்.

“மாநிலங்களவை உறுப்பினராக (ADN) தனக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீட்டில், அடுத்த வாரம் லெம்பா சுபாங் பகுதியில் மீதமுள்ள சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியை தொடங்குவோம் என்றார்.

“இது சிலாங்கூர் பென்யாயாங் ஊக்கத் தொகையின் கீழ் அனைத்து ஏடிஎன்களுக்கும் மாநில அரசு வழங்கிய சிறப்பு திட்டமாகும். மூன்று பகுதிகளில் ஏற்கனவே பழுது பார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள மூன்று பகுதிகள் அடுத்த வாரம் சரி செய்யப்படும், ”என்று அவர் கூறினார்.

நேற்று ஜாலான் பெட்டாலிங் ஜெயா JS6/6A வாகன நிறுத்துமிடத்தில் நடைபெற்ற ஶ்ரீ செத்தியா ஐடில்பித்ரி கொண்டாட்ட விழாவில் அவர் கலந்து கொண்டார்.

நேற்று, உள்கட்டமைப்பு மற்றும் பொது வசதிகள் ஆட்சிக்குழு  உறுப்பினர்  ஈர் இஷாம் அசிம், RM50 மில்லியன் செலவில் சிலாங்கூரில் பெரியளவில் சேதமடைந்த சாலைகளை சரி செய்யும் பணி இரண்டு வாரங்களில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

50 மில்லியன் ரிங்கிட் கூடுதலாக ஒதுக்கப்பட்ட திட்டத்தில் 20க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், மிகவும் மோசமான மற்றும் ஒதுக்குபுறமான சாலைகளைக் கண்டறிய இரண்டு மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

உள்ளூர் அதிகாரிகள் (பிபிடி), மாவட்டக் கவுன்சில்கள் மற்றும் பொதுப்பணித்துறை (ஜேகேஆர்) ஆகியவற்றால் முன்மொழியப்பட்ட சாலைகளுக்கும் தனது தரப்பு முன்னுரிமை அளிக்கும் என்று ஈர் இஷாம் கூறினார்.

2021 முதல் கடந்த ஆண்டு வரை, மாநிலச் சாலை பராமரிப்பு நிறுவனமான இன்வெரசல் 39,000க்கும் மேற்பட்ட சாலை நடைபாதைகளை பயனர் வசதிகாகச் சரி செய்துள்ளது.


Pengarang :