SELANGOR

ஒற்றுமைத் தூதர் திட்டத்தில் பங்கேற்க இளையோருக்கு சிலாங்கூர் அரசு அழைப்பு

ஷா ஆலம், மே 12- மாநில அரசின் ஏற்பாட்டிலான 2023 சிலாங்கூர்
ஒற்றுமைத் தூதர் திட்டத்தில் பங்கேற்கும்படி பொது மக்களுக்கு குறிப்பாக
இளையோருக்கு மாநில சிலாங்கூர் அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இளையோர் மத்தியில் திறன் மற்றும் அறிவாற்றலை வளர்த்து அவர்களை
சமூகத்தின் ஒற்றுமை மற்றும் அமைதித் தூதர்களாக உருவாக்கும்
நோக்கில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக பொது சுகாதாரத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட்
கூறினார்.

தாங்கள் சார்ந்த சமூகங்களில் மத மற்றும் இன பதட்டத்தைத் தணிக்க
விரும்புகின்ற பல்வேறு பின்னணிகளைக் கொண்ட 56 பிரதிநிதிகளை
மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலிருந்தும் தேர்தெடுக்க தாங்கள்
விரும்புவதாக அவர் சொன்னார்.

பல்வேறு வெளிப்புற நடவடிக்கைகள் மூலம் பல்வேறு வாழ்க்கை
பின்னணிகளைக் கொண்ட மக்களுக்கு மத்தியில் ஒற்றுமைப் பாலத்தை
உருவாக்கக் கூடிய ஒற்றுமை தூதர்கள் எங்களுக்குத் தேவை என்று அவர்
தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

வரும் ஜூன் மாதம் 23 முதல் 25ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும்
பயிற்சி முகாமில் 2023 சிலாங்கூர் ஒற்றுமை தூதர் பங்கேற்பாளர்கள்
கலந்து கொள்வர் என்றும் தொடர்பு முறையின் முக்கியத்துவம் மீதான
முக்கியத்துத்தை அந்த பயிற்சியில் அவர்கள் கற்றுக் கொள்வார்கள்
என்றும் அவர் சொன்னார்.

இந்த பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வரும் ஜூன் 26முதல் நவம்பர் 30 வரை தங்கள் சமூக பிரதிநிதிகளை உள்ளடக்கியஒற்றுமை சார்ந்த களத் திட்டங்களை மேற்கொள்வதற்குரிய பொறுப்புஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :