NATIONAL

ஸ்ரீ கோம்பாக் பெருநாள் உபசரிப்பு 2008ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத் தருணத்தை நினைவுப்படுத்தியது- மந்திரி புசார்

கோம்பாக், மே 15- இங்குள்ள தாமான் ஸ்ரீ கோம்பாக்கில் நேற்றிரவு
நடைபெற்ற ஜெலாஜா கித்தா சிலாங்கூர் அய்டில்பித்ரி நோன்புப் பெருநாள்
பொது உபசரிப்பு கடந்த கால நினைவுகளை தமது மனதில் நிழலாடச்
செய்ததாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கடந்த 2008ஆம் ஆண்டில் சிலாங்கூரில் ஆட்சி மாற்றம் நடப்பதற்கு
முன்னர் 12வது பொதுத் தேர்தலுக்கான மாபெரும் இறுதிக்கட்டப் பிரசாரம்
இந்த இடத்தில் நடைபெற்றதாக அவர் சொன்னார்.

கடந்த 2008ஆம் ஆண்டு நினைவுகளை இந்த இடம் மறுபடியும் அசைபோட
வைத்துள்ளது. இதே இடத்தில் டத்தோஸ்ரீ அன்வார் (பிரதமர்) நடத்திய
மாபெரும் இறுதிக்கட்ட பிரசாரம் சிலாங்கூரில் ஆட்சி மாற்றத்திற்கு வழி
வகுத்தது என்று அவர் தெரிவித்தார்.

இறைவன் அருளால், வரும் மாநிலத் தேர்தலிலும் அதே போன்ற
வெற்றியை நாம் மறுபடியும் பெறுவோம் என உறுதியாக நம்புகிறோம்
என்று இங்கு நடைபெற்ற நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில்
உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டார்.

மலேசியா மடாணி நோன்புப் பெருநாள் உபசரிப்புடன் சேர்ந்து நடத்தப்பட்ட
இந்த நிகழ்வில் சுமார் 35,000 பேர் கலந்து கொண்டனர். பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் இந்நிகழ்வில் கலந்து கொண்டது இந்த பொது
உபசரிப்புக்கு மேலும் மெருகைக் கூட்டியது.

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற பொது 12வது பொதுத் தேர்தலில்
போட்டியிட்ட பக்கத்தான் ராக்யாட் கூட்டணி 36 இடங்களை வென்று
ஆடசியைக் கைப்பற்றியது. அத்தேர்தலில் தேசிய முன்னணிக்கு 20
இடங்கள் மட்டுமே கிடைத்தன.


Pengarang :