SELANGOR

போக்குவரத்து நெரிசல் மற்றும் விளையாட்டு வசதிகள் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு – கின்றாரா தொகுதி

உலு லங்காட், மே 15: கின்றாரா மாநில சட்டமன்ற உறுப்பினர் (ADN) அப்பகுதி மக்களின் பிரதிநிதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சிகளில் ஒன்று உள்கட்டமைப்பு மற்றும் விளையாட்டு வசதிகளை மேம்படுத்தியது ஆகும்.

கின்றாரா தொகுதி மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்களைக் கொண்டுள்ளது என்றும், பெரும்பாலான நாடாளுமன்றத் தொகுதிகளை விட இந்த எண்ணிக்கை அதிகம் என்றும் இங் ஸீ ஹான் கூறினார்.

“இவ்வளவு மக்கள்தொகையைக் கொண்ட கின்றாரா தொகுதியில் பல வகையான பிரச்சனைகள் உள்ளன. அதில் மிகப் பெரிய பிரச்சனைகள் போக்குவரத்து நெரிசல் மற்றும் விளையாட்டு வசதிகள் ஆகும்.

“கடந்த சில வருடங்களில் கின்றாராவில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளோம். பூச்சோங் பகுதியில் மேலும் இரண்டு உள்ளரங்கு கூடைப்பந்து மைதானங்களை உருவாக்கியுள்ளோம். மேலும், ஒன்றை உருவாக்க உள்ளோம் என்று குறிப்பிட்டார்.

நேற்று, சிலாங்கூர் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் சிலாங்கூர் 2023 முஹிப்பா முகாமின் நிறைவு விழாவில், “கின்றாராவில் உள்ள பெரும்பாலான திடல்கள் நல்ல நிலையில் உள்ளன” என்று கூறினார்.

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, டமன்சாரா பூச்சோங் நெடுஞ்சாலையில் குடியிருப்பாளர்கள் எளிதாகச் செல்லவும் பல வழிகளை இணைத்துள்ளதாக அவர் கூறினார்.

கடந்த ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி, ஜாலான் கின்றாரா 6 இல் பெர்சியாரான் புஞ்சாக் ஜலீலுடன் இணைக்கும் புதிய பாதை அப்பகுதியில் உள்ள சுமார் 40,000 குடியிருப்பாளர்கள் பயன்பெறும் வகையில் திறக்கப்பட்டது.

RM7 மில்லியனுக்கும் அதிகமான செலவில் திறக்கப்பட்ட இந்த சாலையில் வடிகால் அமைப்பும் மேம்படுத்தப் பட்டுள்ளது. இச்சாலையின் வழி மக்கள் கோலாலம்பூருக்குச் செல்வதற்கும் அங்கிருந்து வெளியேறுவதற்கும் வசதியாக உள்ளது.


Pengarang :