NATIONAL

கடத்தல் சம்பவம் தொடர்பாகச் சமூக ஊடகங்களில் இரண்டு வீடியோ பகிர்வு – காவல்துறை விசாரணை

கோலாலம்பூர், மே 16: ராவாங்கில் உள்ள லோட்டஸ் புக்கிட் செந்தோசா பேரங்காடியில்  கடத்தல் சம்பவம் நடந்ததாகச் சமூக ஊடகங்களில் இரண்டு வீடியோ கிளிப்புகள் பரவியது தொடர்பாக அரச மலேசிய  காவல்துறை (PDRM) விசாரணை அறிக்கையை திறந்துள்ளது.

காலை 9 மணி முதல் வைரலாகப் பரவிய அந்த வீடியோ பதிவு உண்மையில் பல்பொருள் அங்காடியில் 33 வயது நபரால் நடந்த திருட்டு சம்பவம் பற்றியதாகும் என உலு சிலாங்கூர் மாவட்டக் காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் அஹ்மட் பைசல் தஹ்ரிம் கூறினார்.

“வீடியோவை அனுப்பிய நபரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233 இன் கீழ் விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அந்நபருக்கு RM50,000 வரை அபராதம் அல்லது ஒரு வருடத்திற்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

இந்த திருட்டு சம்பவம் குறித்து மதியம் 1.07 மணியளவில் பல்பொருள் அங்காடி ஊழியர் ஒருவரால் புகார் அளிக்கப்பட்டது. மேலும் திருட்டுக்கான தண்டனைச் சட்டப் பிரிவு 380 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது, ”என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த வீடியோ தவறானது மற்றும் சமூகத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்பதால் அதை பரப்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

– பெர்னாமா


Pengarang :