SELANGOR

மே 22 அன்று பெரிய அளவில் நீர் விநியோகத் தடை – ஆயர் சிலாங்கூர்

ஷா ஆலாம், மே 17: ஜாலான் புக்கிட் செராக்கா, பண்டார் புஞ்சாக் ஆலாமில் உடைந்த குழாயைச் சரிசெய்யும் அவசரப் பணியை மே 22 அன்று காலை 9 மணிக்குப் பெங்குருசன் ஆயர் சிலாங்கூர் எஸ்டிஎன் பிஹெச்டி (ஆயர் சிலாங்கூர்) மேற்கொள்ளும்.

இந்த பழுதுபார்க்கும் பணியானது 2,200 மில்லிமீட்டர்  குறுக்களவு  கொண்ட ஒரு பெரிய குழாய் என்பதால் பெரிய அளவிலான விநியோகப் பகுதியை உள்ளடக்கியது. அதனால்  கிள்ளான், ஷா ஆலம் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய இடங்களில் உள்ள 99 பகுதிகளில் திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடைகள் ஏற்படும் என ஆயர் சிலாங்கூர் தெரிவித்துள்ளது.

“மே 23ஆம் தேதி அதிகாலை 3 மணிக்குள் சீரமைப்புப் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப் படுகிறது. பிறகு நீர் விநியோகம் பயனர்களுக்குக் கட்டம் கட்டங்களாக சீரமைக்கப்படும் மற்றும் மே 24 (புதன்கிழமை) இரவு 9 மணிக்குள் முழுமையாக நிலைமை மீட்டெடுக்கப்படும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.

“கசிவு அபாயகரமானதாக இருந்தால், உடைந்த குழாயைச் சரி செய்யும் அவசரப் பணி அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாகவே தொடங்கும்,” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

குடியிருப்பாளர்கள் போதுமான நீரைச் சேமித்து வைக்கவும், திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்படும் காலம் முழுவதும் தண்ணீரை கவனமாகப் பயன்படுத்தவும் ஆயர் சிலாங்கூர் அறிவுறுத்துகிறது.


Pengarang :