SELANGOR

வெள்ளப் பிரச்சனையைச் சமாளிக்க வடிகால் அமைப்பு மேம்பாடு – கிள்ளான் நகராட்சி

ஷா ஆலம், மே 18: இங்குள்ள தாமான் மெலாவிஸில் ஏற்படும் வெள்ளப் பிரச்சனையைச் சமாளிக்கக் கிள்ளான் நகராட்சி, பெரிய U- வடிவக் கான்கிரீட் வடிகால் நிறுவுவது உட்பட, வடிகால் அமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

மேலும், சிலாங்கூர் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையும் (JPS) வெள்ளத்தை தணிக்கும் இப்பணியில் ஈடுபட்டுள்ளது எனக் கிள்ளான் நகராட்சி கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் இயக்குனர் நார்பிசா மஹ்ஃபிஸ் கூறினார்.

“மேம்பாட்டு பணிகள் தற்போது 70 சதவீதத்தை எட்டியுள்ள நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த திட்டம் வெள்ளம் தணிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும். அதன்படி இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை கனமழை பெய்யும் போது  நீர் ஓட்டம் தடையின்றி  இருக்கும் என்றார்.

“நாங்கள் ஜாலான் பெசியின் ஒரு பகுதியில் U வடிவக் கான்கிரீட் கால்வாய்  நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.  ஜாலான் மாத்தாஹரியில் ஒரு நீர்ப்பிடிப்பு குளத்தையும்  எம்.பி.கே கட்டியுள்ளது.   இது சுற்றியுள்ள பகுதியில் வெள்ளப் பெருக்கைக் குறைக்கிறது,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

லிண்தாங் பெசியில் உள்ள வீடுகளுக்குள் மண் அரிப்பு அல்லது நீர் கசிவதைத் தடுக்க அவ்விடத்தைச் சுற்றி 24.46 மீட்டர் நீளமுள்ள கான்கிரீட் தடுப்பணை கட்டும் பணி நிறைவடைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :