SELANGOR

கோத்தா டாமன்சாராவில் மலிவு விற்பனை- 500 கோழிகள், 300 தட்டு முட்டைகள் ஒரு மணி நேரத்தில் விற்பனை

பெட்டாலிங் ஜெயா, மே 18- கோத்தா டாமன்சாரா தொகுதி நிலையில்
இங்கு நடைபெற்ற ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனையில் ஒரு
மணி நேரத்தில் 500 கோழிகளும் 300 தட்டு முட்டைகளும் விற்றுத்
தீர்ந்தன.

இவை தவிர தலா 300 அரிசி, இறைச்சி, மீன் பொட்டலங்களும் 150
போத்தல் சமையல் எண்ணெய் ஆகியவையும் இங்கு விற்பனைக்கு
வைக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக கழகம்
(பி.கே.பி.எஸ்.) கூறியது.

இந்த பொருள்கள் யாவும் இரண்டு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்ததாக
பி.கே.பி.எஸ். நிர்வாகப் பிரிவு உதவி நிர்வாகி முகமது ரிட்சுவான் அப்துல்
ரஹிம் கூறினார்.

கோத்தா டாமன்சாரா, செக்சன் 7 பகுதியில் விற்பனைக்கு வைக்கப்பட்ட
அனைத்துப் பொருள்களும் விரைவாக விற்றுத் தீர்ந்து விட்டதால்
திட்டமிடப்பட்டதை விட வெகு விரைவாகவே விற்பனையை தாங்கள்
முடித்துக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் மாட்டு இறைச்சி ஒரு
பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00
வெள்ளிக்கும் பி கிரேடு முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் 5 கிலோ
சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00
வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

கடந்தாண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை மூன்று மாதங்களுக்கு
நடைபெற்ற இந்த மலிவு விற்பனையின் வழி 20 லட்சம் பேர்
பயனடைந்தனர்.

இந்த மலிவு விற்பனைக்குப் பொதுமக்கள் கிடைத்த அமோக ஆதரவைத்
தொடர்ந்து கடந்த ஜனவரி 16ஆம் தேதி தொடங்கி இந்த திட்டத்தை 1,200
இடங்களுக்கு மாநில அரசு விரிவு படுத்தியது.


Pengarang :