NATIONAL

சீ போட்டியில் பதக்கம் வென்ற கராத்தே விளையாட்டாளர்களை அமைச்சர் சிவகுமார் கௌரவித்தார்

புத்ரா ஜெயா மே 18- கம்போடியாவில் அண்மையில் நடைபெற்ற சீ விளையாட்டு போட்டியில் மலேசியக் கராத்தே விளையாட்டாளர்கள் 4 தங்கம் 2 வெள்ளி மற்றம் 4 வெண்கலப் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமையை தேடித் தந்துள்ளனர்.

கராத்தே குமிட்டே பிரிவில் மலேசிய வீரர் ஷர்மேந்திரன், பிரேம் குமார், சூரிய சங்கர் மற்றும் ஷமளா சந்திரன் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். இப்பிரிவில் முகமட் இக்வால் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மேலும் மலேசிய ஆண்கள் கராத்தே குழுவில் இடம் பெற்ற கார்த்திக், ஷர்மேந்திரன், பிரேம் குமார், சூரிய சங்கர், முகமட் அரிப், குகன் மற்றும் கிரிஸ்வரன் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். பெண்கள் குமிட்டே பிரிவில் மாதுரி மற்றும் ஆண்கள் குமிட்டே பிரிவில் முகமட் அரிப் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

இது தவிர்த்து பெண்கள் குமிட்டே குழு  பிரிவில் இடம் பெற்ற ஷாமளா ராணி, மாதுரி, ஷர்மிளா மற்றும் சாஸ்வாணி ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

கம்போடியா சீ போட்டியில் பதக்கங்களை வென்ற மலேசிய கராத்தே குழுவினர் இன்று மரியாதை நிமித்தமாக மனிதவள அமைச்சர் சிவகுமாரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றனர்.

சீ போட்டியில் மலேசியாவுக்கு ஏழு தங்கம் பெற்றுத் தந்து சாதனை படைத்த டத்தோ பி. அறிவழகன், கராத்தே மாஸ்டர் பி.தியாகு, குழு நிர்வாகி சுகுமாரன், தலைமை பயிற்சியாளர் தாமிர், துணை பயிற்சியாளர்கள் புவனேஸ்வரன், செந்தில், குணசீலன் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.


Pengarang :