SELANGOR

இலவசமாகக் குழந்தை பராமரிப்பு பயிற்சி – சிலாங்கூர் குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி (இம்பாக் சிலாங்கூர்)

பெட்டாலிங் ஜெயா, மே 19: நேற்று டேவான் செக்‌ஷன் 7 கோத்தா டாமன்சாராவில் நடைபெற்ற ஜெலாஜா எஹ்சான் ரக்யாட் நிகழ்வில் சிலாங்கூர் குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி செயலகம் (IMPAK Selangor) அதன் திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

குழந்தை பராமரிப்பாளராகப் பணிபுரிபவர்கள்  இலவசமாகக் குழந்தை பராமரிப்பு பயிற்சியில் கலந்து கொள்வதை எளிதாக்கும் வகையில் முன்பதிவு கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது என அதன் பிரதிநிதி முஹம்மது சஃபுவான் அலியாஸ் கூறினார்.

“இத்திட்டத்தின் இலக்கக் குழுவாகப் பெற்றோர்கள் இருப்பதால் மலிவு விற்பனை சந்தைகளை ஒரு தளமாக நாங்கள் பயன்படுத்துகிறோம்.

“நாங்கள் வருகையாளர்களை அணுகி, அவர்களின் குழந்தைகளைப் பராமரிப்பு மையத்திற்கு அனுப்ப படுகிறார்களா அல்லது சுயமாகக் கவனித்துக் கொள்கிறார்களா என்று கேட்டு, அதன் வழி விவரங்களை சேகரிக்கரிக்கிறோம். மக்களின் ஆதரவும் சிறப்பாக இருந்தது.

“சிலாங்கூர் குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி செயலகம் உடனான இந்த இலவசப் பயிற்சியில் கலந்து கொள்ள ஒவ்வொரு தொகுதிலிருந்தும் 50-70 குழந்தை பராமரிப்பாளர்கள் பங்கேற்பதை இலக்காகக் கொண்டுள்ளோம்,” என்று அவர் கூறினார்.

இத்திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட 4,000 குழந்தை பராமரிப்பு மையங்கள் மற்றும் 40,000 குடும்பங்கள் பலன் பெறும் என்ற எதிர்பார்ப்புடன் இம்பாக் சிலாங்கூர் இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது. இத்திட்டத்திற்காக 6 மில்லியன் ஒதுக்கப் பட்டுள்ளதாகக் கடந்த நவம்பர் 25 அன்று டத்தோ மந்திரி புசார் அறிவித்தார்.

இம்பாக் சிலாங்கூர் திட்டம் என்பது குழந்தைப் பராமரிப்பில் உதவி தேவைப்படும் பெண்களுக்கு மாநில அரசு ஏற்பாடு செய்த ஓர் உதவி திட்டமாகும்.

மேலும், குழந்தை பராமரிப்பாளர்கள் பதிவு செய்யப்பட்டு பயிற்சியளிக்கப் படுவதை உறுதி செய்வதற்காக இம்பாக் சிலாங்கூர் ஓர் இலவசப் பயிற்சி திட்டத்தையும் வழங்குகிறது. இதன் மூலம் குழந்தை பராமரிப்பு துறைக்கான ஒரு இலக்கை உருவாக்குகிறது.


Pengarang :