SELANGOR

உடைந்த குழாய் பழுது பார்க்கும் பணி 72.3 சதவீதம் நிறைவடைந்துள்ளது – ஆயர் சிலாங்கூர்

ஷா ஆலம், மே 23: ஜாலான் புக்கிட் செராக்கா, பண்டார் புஞ்சாக் ஆலத்தில் உடைந்த குழாயைப் பழுது பார்க்கும் பணி இன்று அதிகாலை 3 மணிக்கு முடிவடையும் என்று பெங்குருசன் ஆயர் சிலாங்கூர் எஸ்டிஎன் பிஎச்டி (ஏர் சிலாங்கூர்) தெரிவித்துள்ளது.

இரவு 9 மணி நிலவரப்படி, பழுது பார்க்கும் பணி 72.3 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையின்படி பணிகள் நடைபெறுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

“உடைந்த குழாயைச் சீரமைக்கும் அவசர பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீர் வழங்கல் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, பயனர்களுக்கு நீர் படிப்படியாக விநியோகிக்கப்படும்.

“ஆயர் சிலாங்கூர் செயலி, முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு தளங்கள் மூலம் பயனர்கள் அவ்வப்போது திட்டமிடப்படாத நீர் வழங்கல் தடைகளைப் பற்றிய தகவல்களைப் பெறலாம் அல்லது 15300 இல் ஆயர் சிலாங்கூரை அழைக்கலாம்” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

பயனர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளின் பட்டியலை https://hentitugas.airselangor.com/ மற்றும் ஆயர் சிலாங்கூர் செயலி மூலமாகவும் பெறலாம்.


Pengarang :