SELANGOR

சட்ட விரோதமாகக் குப்பை கொட்டும் பிரச்சனைக்குத் தீர்வு காண திட்டம்

கிள்ளான், மே 23: சட்ட விரோதமாகக் குப்பை கொட்டும் பிரச்சனைக்கு தீர்வு காண, தொழிற்சாலை கழிவுகளை நிர்வகிக்க, கேடிஇபிடபிள்யூஎமை நியமிக்க மாநில நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

மாநிலத்தின் துணை நிறுவனமான கேடி இபி கழிவு மேலாண்மை, கழிவுகளை அகற்ற சரியான நடைமுறைகளைக் கொண்டுள்ளது மற்றும் அதன் மூலம் நீண்ட காலமாக மாநிலத்தை பாதித்து வரும் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று நம்புவதாக உள்ளூர் அரசாங்கத்தின் பொறுப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் கூறுகிறார்.

சட்டவிரோத கழிவு “ ஒரு பெரிய சவால். எனவே, சிலாங்கூரில் உள்ள தொழிற்சாலைகள் உற்பத்தி செய்யும் குப்பைகள் மீது சம்பந்தப்பட்ட தரப்பினர் கவனம் செலுத்துவார்கள் என்று நம்புகிறோம்” என்று இங் ஸீ ஹான் கூறினார்.

தற்போது தொழிற்சாலைகளால்  நியமிக்கப்படும் ஒப்பந்ததாரர்கள் ஏற்படுத்தும்  சட்டவிரோத  கழிவு  சிக்கலை இன்னும்  ஆக்ககரமாக  கையாள,  இந்த  பரிந்துரை சிறப்பாக இருக்கும் என்பதில் கிள்ளான் நகராண்மை கழக தலைவர் நோ ரெய்னி ரோஸ்லானும்  கருத்திணக்கம் கொண்டுள்ளார்.

“ஒப்பந்ததாரர் அறிவுறுத்தியபடி தொழிற்சாலை கழிவுகளை அகற்ற வில்லை என்றால், அதை கேடி இபி கழிவு மேலாண்மை மூலம் நிர்வகிக்குமாறு கோருவது ஒரு தீர்வாகும், ஏனெனில்  கேடிஇபி  சேவையாளர்கள் கழிவுகளை சரியான இடத்தில் அகற்றுவதை நாங்கள் அறிவோம்,” என்று அவர் கூறினார்.

வணிக நிறுவனங்கள்  அதன் உரிமத்தைப் புதுப்பிப்பதற்கு முன், கழிவு அகற்றுதல்  முறையாக மேற்கொள்வது உறுதிப்படுத்த  தனது தரப்பினர் தொடர்ந்து கண்காணித்து  வரும் என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :