ANTARABANGSAHEALTH

சீனாவில் புதிய கோவிட்-19 அலை- ஒரு வாரத்தில் 6.5 கோடி பேர் பாதிப்புக்குள்ளாகும் அபாயம்

பெய்ஜிங், மே 27- புதிய கோவிட்-19 வைரஸ் சீனாவைத் தாக்கியுள்ள நிலையில் கடந்த நான்கு வார காலத்தில் பெய்ஜிங்கில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அபரிமித உயர்வைக் கண்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து முன்னெச்ரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஜெர்மனி செய்தி நிறுவனம்  கூறியது.

வரும் ஜூன் மாத இறுதி வாக்கில் இந்த நோய்த் தொற்றுப் பரவல் வாரத்திற்கு 6 கோடியே 50 லட்சமாக உயரும் சாத்தியமுள்ளதாக சீனாவின் தொற்று நோயியல் நிபுணர்  ஸோங் நான்ஷான் கூறியுள்ளார்.

தற்போது வாரம் 4 கோடி கோவிட்-19 சம்பவங்கள் பதிவாவதாக என்று மதிப்பிடப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டிலுள்ள 140 கோடி மக்கள் தொகையில் 80 முதல் 90 விழுக்காடு கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரியில் ஏற் பட்ட நோய் பரவலின் போது பாதிக்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

குளிர் காலத்தில் இந்த வைரஸ் பரவலால் ஏற்பட்ட மரணங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தரவுகள் கிடைக்காத போதிலும் கிட்டத்தட்ட பத்து லட்சம் பேர் இந்த நோய்த் தொற்றுக்கு பலியாகி இருக்க கூடும் என்று வெளிநாட்டு நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.


Pengarang :