SELANGOR

குப்பைகளைச் சேகரிக்கும் குடியிருப்பாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் – அம்பாங் ஜெயா நகராண்மை கழகம்

ஷா ஆலம், மே 30: குடியிருப்புப் பகுதிகளில் குப்பைகளைச் சேகரிக்கும் குடியிருப்பாளர்களுக்கு அம்பாங் ஜெயா நகராண்மை கழகச் சூன்19 இன் குடியிருப்போர் குழு RM3 ஊக்கத்தொகையை வழங்கவுள்ளது .

குடியிருப்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குப்பைகளைச் சுத்தம் செய்து அவற்றை நிரப்பும் ஒவ்வொரு பிளாஸ்டிக் பைக்கும் குடியிருப்பாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது என்று கவுன்சிலர் கூறினார்.

“இந்த திட்டம் குடியிருப்பாளர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளைச் சுத்தமாக வைத்திருப்பதில் அதிக விழிப்புணர்வுடன் இருக்க ஊக்குவிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

“மேலும், நாங்கள் லார்வாக்களை கண்டுபிடித்து அழிக்கும் ஒரு போட்டியை நடத்துகிறோம். அதில் RM500 ரொக்கம் வழங்கப்படுகிறது,” என்று தெரத்தாய்  தொகுதியின் உதவி ஒருங்கிணைப்பு அதிகாரி முகமட் ஃபிர்தௌஸ் பாஹ்ப் கூறினார்.

இந்த நடவடிக்கையானது டிங்கி நோய் தொற்றைக் குறைக்கும் என்று அவர் நம்புகிறார், குறிப்பாகப் பெர்மை ரியா மற்றும் பெர்மாய் பிரிமா அடுக்குமாடி குடியிருப்புகளில் இம்மாதப் பாதி வரை 60க்கும் மேற்பட்ட சம்பவங்கள் அங்கு  பதிவாகியுள்ளன என்று  அவர்  கூறினார்.


Pengarang :