SELANGOR

பெட்டாலிங் ஜெயா சமூக நூலகத்தின் பண்டார் உத்தாமா கிளை திறக்கப்பட்டது

ஷா ஆலம், மே 30: மே 27 அன்று பெட்டாலிங் ஜெயா சமூக நூலகத்தின் பண்டார் உத்தாமா கிளையைப் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மேயர் முகமது அஷான் எம்டி அமீர் திறந்து வைத்தார்.

அந்நூலகத்தில் 9,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருப்பதாக பண்டார் உத்தாமா பல்நோக்கு மண்டபம் 3, ஜாலான் BU 6/2 இல் அமைந்துள்ள பெட்டாலிங் ஜெயா மாநகராட்சியின் நிறுவனத் தொடர்புப் பிரிவின் ஊடகச் செயலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2,200 சதுர அடி பரப்பளவில் அந்த நிர்வாகத்தின் கீழ் உள்ள மூன்றாவது சமூக நூலகம் இதுவாகும். மேலும், அந்த நூலகத்தில் மின் புத்தகச் சேவையும் வழங்கப்படுகிறது.

“இந்த நூலகத்தை நிறுவிய தன் நோக்கம், வாசிப்பு கலாச்சாரத்தை மேம்படுத்துவதில், குடியிருப்பாளர்களுக்குக் குறிப்பாக மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு வசதிகளை ஏற்படுத்தி தருவதாகும்.

“இந்த நூலகத்தில் புத்தகங்கள் மற்றும் போர்டு கேம்களை இரவல் பெறுதல், இணையம், வாசிக்கும் அறை மற்றும் கணினி ஆகிய வசதிகள் உள்ளன,” என்று அவர் கூறினார்.

ஆகஸ்ட் 2019ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்நூலகம், மொத்தம் 14,757 வருகையாளர்களைப் பெற்றுள்ளது மற்றும் 13,177 புத்தக இரவல்களைப் பதிவு செய்துள்ளது.


Pengarang :