SELANGOR

ஜோப்கேர் திட்டத்தின் வழி 10,000 வேலை வாய்ப்புகள்- ஜூன் மாதம் தொடங்கி மாநிலம் முழுவதும் நடைபெறும்

ஷா ஆலம், மே 30- சிலாங்கூர் அரசின் ஏற்பாட்டிலான வேலை உத்தரவாதப்
பயணத் தொடர் (ஜோப்கேர்) வரும் ஜூன் மாதம் தொடங்கி அனைத்து
ஒன்பது மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது.

இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளும்படி வேலை
தேடுவோரை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக்
கொண்டுள்ளார்.

சிலாங்கூர் தொழிலாளர் திறன் மேம்பாட்டுப் பிரிவினால் (யு.பி.பி.எஸ்.)
கடந்த கடந்த 2021ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்த வேலை
வாய்ப்புத் திட்டத்தின் மூலம் சுமார் 10,000 வேலை வாய்ப்புகள்
வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை நடைபெறும் இந்த வேலை வாய்ப்புச்
சந்தையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 200 நிறுவனங்கள்
பங்கேற்கும் என்று அவர் தெரிவித்தார்.

சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன்
நடத்தப்படும் இந்த வேலை வாய்ப்பு பயணத் தொடரின் வாயிலாக கடந்த
2021 நவம்பர் முதல் இவ்வாண்டு மே மாதம் 6ஆம் தேதி வரை சுமார் 2,500
பேர் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக வேலை இழந்த குறைந்த,
நடுத்தர மற்றும் உயர் திறன் கொண்ட தொழிலாளர்களுக்கு வேலை
வாய்ப்பினை மீண்டும் ஏற்படுத்தித் தருவதைக் நோக்கமாக கொண்டு இந்த
ஜோப் கேர் திட்டத்தை மாநில அரசு தொடக்கியது.


Pengarang :