SELANGOR

வெள்ளப் பிரச்சனையைச் சமாளிக்க வடிகால் அமைப்பை மேம்படுத்தும் பணி கிட்டத்தட்ட 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது

ஷா ஆலம், மே 31: கிள்ளான் நகரில் தாமான் மெலாவிஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பிரச்சனையை சமாளிக்க வடிகால் அமைப்பை மேம்படுத்தும் பணியில் கிட்டத்தட்ட 70 சதவீதத்தைக் கிள்ளான் நகராண்மை கழகம் நிறைவு செய்துள்ளது.

வெள்ளத் தணிப்பு கட்டுமானப் பணியில் பெரிய U- வடிவ கான்கிரீட் வடிகால் நிறுவப்பட்டது. இது வரும் ஆகஸ்ட் மாதம் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அதன் தலைவர் நோரெய்னி ரோஸ்லான் கூறினார்.

“சிலாங்கூர் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையும் (ஜே.பி.எஸ்) பம்ப் திறனை அதிகரிப்பது மற்றும் அப்பகுதியில் வடிகால் அமைப்பை மேம்படுத்துவது உட்பட வெள்ளத்தைத் தணிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இரண்டு முதல் மூன்று மணி நேரம் மழை பெய்யும் போது, நல்ல நீர் விரைவாக வெளியேற அனுமதிக்கும் வகையில் வெள்ளத் தணிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த மேம்படுத்தல் பணி மேற்கொள்ளப் பட்டுள்ளது.

அப்பகுதிகளில் வசிப்பவர்களின் வீடுகளுக்குள் மண் அரிப்பு ஏற்படுவதையும் அல்லது தண்ணீர் புகுவதைத் தடுக்கவும் 24.46 மீட்டர் நீளமுள்ள U- வடிவ கான்கிரீட் வடிகால் கட்டப்பட்டது என்று நேற்று கிள்ளான் நகராண்மை கழகத் தலைமையகத்தில் நடைபெற்ற மாதாந்திரக் கூட்டத்தில் பேசிய நோரெய்னி தெரிவித்தார்.


Pengarang :