SELANGOR

இவ்வாண்டில் 300 சட்டவிரோதக் குப்பைக் கொட்டும் மையங்களை மூட ஊராட்சித் துறை அமைச்சு இலக்கு

ஷா ஆலம், ஜூன் 1- இந்த ஆண்டு குறிப்பாகச் சிலாங்கூரில் சுமார் 300
சட்டவிரோதக் குப்பை கொட்டும் இடங்களை அகற்ற ஊராட்சி துறை
அமைச்சு நோக்கமாகக் கொண்டுள்ளது.

தாம் பதவிக்கு வந்த 100 நாட்களுக்குள் மொத்தம் 128 சட்டவிரோதக் குப்பைக்
கொட்டும் மையங்கள் அகற்றப்பட்டுள்ள வேளையில் இந்த முயற்சிகள் தொடர்ந்து
மேம்படுத்தப்படும் என்று ஊராட்சித் துறை மேம்பாட்டு அமைச்சர் ஙா கோர் மிங்
கூறினார்.

இந்த ஆண்டு நாட்டில், குறிப்பாகச் சிலாங்கூரில் 300 சட்டவிரோதக் குப்பைக்
கொட்டும் இடங்களை அகற்ற இலக்கு நிர்ணயித்துள்ளேன். சிலாங்கூர் மாநிலத்தில்
பல தொழில்துறை பகுதிகள் இருப்பதால் இம்மாநிலத்திற்கு முன்னுரிமை
அளிக்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

இதற்கிடையில், சட்டவிரோதக் குப்பை பிரச்சனையைச் சமாளிக்க 2097 ஆம் ஆண்டு
திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது சுத்திகரிப்பு சட்டத்தைப் (சட்டம் 672) செயல்படுத்துவது தொடர்பில் சிலாங்கூருடன் தனது அமைச்சு விவாதித்து வருவதாக அவர் கூறினார்.

திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொதுச் சுத்திகரிப்புச் சட்டங்களில் சீரான தன்மையை
உறுதிப்படுத்தும் சட்டத்தில் கையெழுத்திட சிலாங்கூர் பரிசீலித்து வருவதாக ஊடகங்கள்
முன்பு தெரிவித்திருந்தன.


Pengarang :