NATIONAL

சுங்கை லங்காட் வெள்ளத் தணிப்பு திட்டம் 10 ஆண்டுக்குள் நிறைவடையும்

காஜாங், ஜூன் 12: சுங்கை லங்காட் வெள்ளத் தணிப்புத் திட்டம் (ஆர்டிபி) 10 ஆண்டுகளில் மூன்று கட்டஙளாகப் பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என சுற்றுச்சூழல் எக்ஸ்கோ தெரிவித்துள்ளது.

சுங்கை லாங்காடில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பிரச்சனையை சமாளிக்க நதிகளை தூர்வாருதல் மற்றும் ஆற்றின் கரைகளை பலப்படுத்துதல் பழுது பார்த்தல் உள்ளிட்ட குறுகிய காலத் திட்டங்கள் இவ்வாண்டு இறுதியில் செயல்படுத்தப்படும் என்று ஹீ லாய் சியான் கூறினார்.

“இந்த சுங்கை லங்காட் திட்டம் அடுத்த 100 ஆண்டுகள் உள்ளடக்கிய ஒரு திட்டமாகும். இது மாநில அரசின் பொறுப்புக்கு மட்டும் உட்படாமல் மத்திய அரசின் கீழும் செயல்படுகிறது, ஏனெனில் இத்திட்டத்திற்கு கோடிக்கணக்கான நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிறது.

“எனவே, குடியிருப்பாளர்கள் இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.


மாநில அரசு 2023 பட்ஜெட்டில் RM16.1 மில்லியனை மாநில நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறைக்கு வெள்ளத் தணிப்பு திட்டங்களைக் குறிப்பாகச் சுங்கை கிள்ளான், சுங்கை லங்காட் மற்றும் சுங்கை சிலாங்கூர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் செயல்படுத்த ஒதுக்கீடு செய்துள்ளது.


Pengarang :